தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் “நமக்கு நாமே திட்டம்” கீழ் நடைபெற்று வரும் பொதுநலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ரஹ்மத் நகர் மற்றும் ராம் நகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய நூலக கட்டுமானப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் திட்டமிட்டபடி விரைவில் நிறைவடைய வேண்டும் என்றும், கல்வி வளர்ச்சிக்கு நூலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் மேயர் தெரிவித்தார். வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூலகம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் கலந்து கொண்டார்.