தூத்துக்குடி – திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலையில், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரிலும் அன்ட்ரோ டீ ஸ்டால் அருகிலும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவாகி இருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் தெளிவாக தெரியாததால் வாகன ஓட்டிகள் திடீர் பிரேக் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்களும், பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பது தவறான நடைமுறை. அதற்கு முன்பே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைத்து, எச்சரிக்கை பலகைகள் அமைத்து, விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஒருமித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.