தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:
“1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (BLA-2) மூலமாக அதிகபட்சம் 50 வரை பெற்றுவந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அரசியல் கட்சிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரப் படிவங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் (BLO) மட்டுமே நேரடியாகப் பெறப்பட வேண்டும். இதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
மனு அளித்த பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உட்பட அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடு தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை — அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முழுவதும் பசுமை அலை கிளப்பிய மிதிவண்டி பேரணி!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் – பல்வேறு மேம்பாட்டு பணிகள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டும் விழாக்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026