தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக "பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சிகள் அளிப்பதற்காக தூத்துக்குடி நகரம், கோவில்பட்டி, மணியாச்சி மற்றும் விளாத்திகுளம் ஆகிய உட்கோட்ட பகுதிகளில் மொத்தம் 4 அரசு மாணவியர் தங்கும் விடுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 180 மாணவிகளுக்கு கராத்தே அடிப்படை பயிற்சி கடந்த 20.02.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி மேற்படி பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா நேற்று (21.03.2025) மணியாச்சி உட்கோட்டத்தில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு உடனிருந்தார்.
அதேபோன்று கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் தலைமையிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் தலைமையிலும் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
இந்த தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பயிற்சி நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜமால் உட்பட காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்'......, 'பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்'......, திட்டத்தின் கீழ் தற்காப்பு பயிற்சி நிறைவு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பாக 'பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு விழா நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
முந்தைய
ஆசிரியரும், எழுத்தாளருமான நெய்தல் யூ. அண்டோவுக்கு எதுக்கு பாராட்டு விழா தெரியுமா?...
அடுத்த
பாஜக பிரமுகர் காசிலிங்கம் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026