தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட கிருபை நகர், கிருபை சர்ச் ரேஷன் கடை அருகே உள்ள பகுதியில் முட்புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் கவுன்சிலர் சரவணகுமார் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீப்பிடித்த பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் சரவணகுமார் மற்றும் விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு கிருபை நகர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டினர்.
தூத்துக்குடி
50 வது வார்டு கிருபை நகரில் பற்றி எரிந்த தீ : கண் இமைக்கும் நேரத்தில் களமிறங்கிய திமுக கவுன்சிலர் சரவணகுமார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேலவன் நகைக்கடை விவகாரம்: விக்ரம் ராஜா நேரில் விசாரணை ‘சாதி, மதத்தை வைத்து திசைதிருப்ப வேண்டாம்’ என வலியுறுத்தல்!!
அடுத்த
ஸ்ரீமூலக்கரையில் புதிய பாலம், சாலை சீரமைக்க கோரிக்கை எம்.எல்.ஏ. சரவணனிடம் வீ.சுரேஷ்குமார், வீ.சரவணபெருமாள் மனு!!
இதையும் படிக்கலாம்
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! மூப்பன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் காங்கிரஸ் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்தின!!
19 Oct 2026
தூத்துக்குடிக்கு வந்த ஹோவர்கிராஃப்ட் கப்பல்! கடலிலும், மணலிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும் அதிசய வாகனம் – நேரில் கண்டு வியந்த ராஜா ஸ்டாலின்!!
16 Oct 2026
தனசேகரன் நகரில் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு அச்சம்! பெண்கள், சிறுமிகள் நடமாட முடியாத அவலம்? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? போராட்டம் வெடிக்குமா?
16 Oct 2026
சாதிய மோதல்களைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி பொதுச் செயலாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மனு!!
16 Oct 2026