சமையல் எரிவாயு நுகர்வோர்கள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு அல்லது முகப்பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க கலெக்டர் இளம் பகவத் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் கலெக்டர் இளம் பகவத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசின் மானிய தொகை ஒவ்வொரு சிலிண்டருக்கும் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு சமீப காலமாக நுகர்வோரின் உண்மை தன்மையை சரிபார்த்து வருகிறது. இதனால் சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் அந்தந்த கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று அங்குள்ள கருவியில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். அல்லது விழி ரேகை, முகப்பதிவு வாயிலாகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த விபரங்கள் நுகர்வோருக்கும், பொதுமக்களுக்கும் சரியாக சென்றடையவில்லை இது சம்பந்தமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை இதனால் விரல்ரேகை, மற்றும் விழிரேகை, முகப் பதிவுகளை பலரால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு இந்த மாதம் முதல் எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.
இதனால் இந்த மாதம் பதிவு செய்தால் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா என்கிற சந்தேகம் நுகர்வோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல இணைப்புகள் யார் பெயரில் உள்ளதோ அவர்களின் இறப்பிற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
இதனால் அவர்களின் இணைப்புகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டால்தான் அவர்கள் நேரில் சென்று வென்று அல்லது முகப்பதிவு செய்ய முடியும் இதற்கு கால அவகாசம் ஆகும். இதனால் இந்த பதிவுக்கு மேலும் மாத காலம் நீட்டிப்பு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
சமையல் எரிவாயு சிலிண்டர் கைரேகை பதிவு செய்ய விழிப்புணர்வு இல்லாததால் கால நீட்டிப்பு செய்ய மதிமுக சார்பில் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தமான திட்டங்கள் - தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
வாடகை கட்டிடத்தில் செயல்படும் சுகாதார நிலையங்களுக்கு அரசு சொந்த கட்டிடம் எம்.எல்.ஏ சண்முகையா கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026